Sunday 5 May 2013

தமிழ்நாட்டில் அதிக லாபம் தரும் தொழில்களில் தண்ணீர்தான் முதலிடத்தில் உள்ளது. கிராப்புறங்களில் நிலத்தை வாங்கி, நிலத்தடி நீரை உறிந்து கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கிறார்கள். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இதைக் கண்டிக்கும் விதமாக அரசுக்கு அறிக்கை விடுத்துள்ளார்.

‘‘திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம் சூரியூர், காந்தலூர், கும்பகுடி ஊராட்சிப்பகுதிகள் மானாவரி மற்றும் கிணறு இறவை பாசனப்பகுதிகளாகும். இதில் சூரியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய சூரியூர் கிராமத்து அருகில் எல்.ஏ.பாட்லர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும், டி.பி.எஸ்.மினரல் குடிநீர் தயாரிக்கும் நிறுவனமும் அமைந்துள்ளன. இந்த 2 நிறுவனங்களும் 6 ராட்சத ஆழ்குழாய்களை அமைத்து நாள் ஒன்றுக்கு ஒரு கோடி லிட்டர் வரை தண்ணீரை உறிஞ்சி எடுக்கின்றன.

இதனால், இம்மூன்று ஊராட்சிப்பகுதிகளின் வேளாண்மைத்தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 1100 ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்ய முடியாத நிலையும், விவசாயத்தையும், விவசாயக் கூலித் தொழிலையும் நம்பியிருக்கின்ற சுமார் இரண்டாயிரம் குடும்பங்களை பாதிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே நிலத்தடி நீரை முற்றாக உறிஞ்சுகின்ற ராட்சத குழாய்களின் இயக்கத்தையும் இவ்விரண்டு நிறுவனங்களின் உற்பத்தியையும் உடனடியாக நிறுத்திவிட்டு மூன்று ஊராட்சி மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்குமாறு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்‘‘ என்று குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment