Sunday 21 April 2013

அந்தத் தலைவரின் வளர்ப்பு மகன் மருத்துவர் பட்டம் பெற்று வீடு வந்தார்.

ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தந்தையிடம் ஆசி பெறச் சென்றார்.

வாழ்த்திய தந்தை தனக்குக் காய்ச்சல் இருப்பதுபோல் தோன்றுவதாகச் சொல்லி பரிசோதிக்கச் சொன்னார். மகனும் பரிசோதித்தார்.

மருந்தை எழுதித் தரச் சொன்ன தலைவர்,

ஆணியில் தொங்கிய சட்டையை எடுத்து வரச்சொல்லி அதிலிருந்து ஒரு ரூபாய் எடுத்து மகனிடம் தந்தார்.

பிறகு சொன்னார்,

“இது உனக்கு ஆசீர்வாதமாய் தரப்படுவது மட்டுமல்ல.

ஏழைகளிடம் குறைவான கட்டணம் வாங்க வேண்டும் என்று நீ நினைவில் வைக்கவே உன் முதல் நோயாளியின் கட்டணம் இது” என்றார்.

அவர் பேரறிஞர் அண்ணா...!

0 comments:

Post a Comment