Wednesday 26 June 2013

மதுரை ஆவின் பால் டிப்போவிற்கு சென்றிருந்தேன். பால், தயிர் வாங்கிக்கொண்டு திரும்பினேன். இளம் பெண் ஒருவர் பூக்களை விற்றுக்கொண்டிருந்தார். அவரை ஊக்கப் படுத்தவேண்டும் என்று அவரிடம் மல்லிப்பூவும், ஒற்றை ரோஜாவும் வாங்கினேன்.

பூவிற்கான விலையை கொடுத்தேன் சில்லறை இல்லா 100 ரூபாயா தான் இருக்கு என்று சொன்னேன். என்கிட்டயும் இல்லமா என்றார்.. என்னமா சிலரை இல்லையா என்றேன்?

காசு இருந்தா தானமா சில்லறை இருக்குறதுக்கு... ஒத்த பூ கூட இன்னம் விற்களை அம்மா என்றார்...

பால் டிப்போவிலும் சில்லறை கிடைக்க வில்லை.. என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருக்க முதியவர் ஒருவர் என்னிடம் வந்து யாசகம் கேட்டார்..

அட என்ன அய்யா நானே சில்லறை இல்லாம நிக்கிறேன் என்றேன். எவளோ ரூபாய்க்கு சில்லறை வேணும் என்று கேட்டார் 100 ரூபாய்க்கு சில்லறை வேணும் என்றேன். வேக வேகமாக அவரின் கைப்பையில் இருந்து சில்லறைகளை எடுத்து நீட்டினார்.

எனக்கோ அதிர்ச்சி !

உழைப்பவனிடம் காசு இல்லை, யாசகம் கேட்பவனிடம் இவ்வளவு பணமா என்று. பூ வியாபாரம் செய்த பெண்ணும் நானும் பேச வார்த்தைகள் இன்றி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டும் அதிர்ச்சியோடு..

அவரிடம் காசை கொடுத்து சில்லறைகளை பெற்றுக்கொண்டு அவருக்கும் தர்மம் செய்தேன்.

அங்கு இருந்தவர்கள் என்னை பார்த்து பிச்சை காரனிடம் இருந்து சில்லறையை வாங்கி அவனுக்கே தர்மம் செய்கிறாள் என்று நினைத்திருப்பார்கள்.

இது தான் உலங்கம்.
உழைப்பவனுக்கு தகுந்த ஊதியம் கிடைப்பதில்லை.
உழைக்காமல் இருப்பவன் வசதியாக இருக்கிறான்.

அந்த முதியவர் என்னை கடந்து சென்ற பிறகும் பூவிற்ற பெண் கூறிய வரிகள். இந்த மனுஷங்க எங்கம்மா உழைக்கிறவன மதிக்கிது ? பிச்சைக்காரன கூட பாவம்னு நெனச்சு தர்மம் பண்ணுது ஆனா சொந்த கால்ல நிக்கணும்னு நினைக்கிறவன முடமாத்தான் ஆக்குது என்றார்.

அந்த பெண் கூறியது அவள் மனதில் இருந்த வரிகளா இல்லை வார்த்தைகளா என்று தெரியவில்லை.

0 comments:

Post a Comment